புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (16:36 IST)

புனித நகரங்கள், புனித தலங்களில் மது, இறைச்சிக்கு தடை.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

நர்மதா ஆற்றங்கரையில் உள்ள புனித நகரங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் மது மற்றும் இறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

நர்மதா நதியின் பிறப்பிடத்தை தூய்மையாகவும் புனிதமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கு அதிகம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

நர்மதா அருகில் மிகத் தொலைவில் ஒரு செயற்கை நகரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நதியை சுற்றி உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் கழிவுநீரை ஆற்றில் விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

நர்மதா நதியை சுற்றி நடக்கும் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்றும் அந்த நதியை ஒட்டி உள்ள புனித நகரங்களிலும் மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மது மற்றும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அந்த பகுதி மக்கள் இந்த இரண்டையும் உட்கொள்வதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran