மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!
லட்சக்கணக்கான பக்தர்கள் இன்னும் புனித நீராட காத்திருப்பதால் மகா கும்பமேளாவை நீடிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று வரை 50 கோடிக்கு அதிகமான மக்கள் புனித நீராடியுள்ள நிலையில், இந்த நிகழ்வு வரும் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், பிரயாக்ராஜ் சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், பல கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால், அவர்களால் புனித நீராட முடியுமா என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறிய போது, “இதற்கு முன்பு நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி 75 நாட்கள் வரை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட காத்திருப்பதால், மகா கும்பமேளா நாட்களை நீடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, உத்தரப்பிரதேச அரசு இது குறித்து ஆலோசனை செய்து, கும்பமேளா நாட்களை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran