புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (10:32 IST)

திடீரென ரீசார்ஜ் ப்ளான் விலையை ஏற்றிய ஏர்டெல்! – புதிய ப்ளான் விவரங்கள் உள்ளே..!

ஏர்டெல் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை அதிகரித்துள்ளது பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பரவலாக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் இரு நிறுவன ரீசார்ஜ் ப்ளான்களும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே தொடர்ந்து வந்தன.

இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை 20% முதல் 25% வரை உயர்த்தியுள்ளது. குறைந்த பட்ச ரீசார்ஜ் விலை 79 ஆக இருந்த நிலையில் தற்போது 99 ரூபாயாக உயர்ந்துள்ளது. அன்லிமிடட் கால் மற்றும் தினசரி 1ஜிபி டேட்டா கொண்ட 28 நாட்களுக்கான ரீசார்ஜ் முதலில் 219 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 265 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுபோல அனைத்து ப்ளான்கள் விலையும் உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.