திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 அக்டோபர் 2021 (12:58 IST)

90ஸ் கிட்ஸ்களா.. உங்க ஃபேவரைட் மொபைல் உங்களுக்காக! – நோக்கியா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு!

தனது பழைய மாடல் மொபைல்களை மீண்டும் அறிமுகப்படுத்தி வரும் நோக்கியா நிறுவனம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2000ம் ஆண்டு முதலாகவே மொபைல் விற்பனையில் கொடிக்கட்டி பறந்த நிறுவனம் நோக்கியா. இண்டர்நெட் வசதியே இல்லாத காலத்தில் எப்.எம்.ரேடியோ, ஸ்னேக் கேம் அம்சங்கள் அடங்கிய நோக்கியா போன்கள் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டாக இருந்து வந்தன.

இந்நிலையில் நோக்கியா நிறுவனம் தனது பழைய மாடம் மொபைல்களை மீண்டும் தயாரிக்க தொடங்கியுள்ள நிலையில் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் மாடலான 6310 ஐ மீண்டும் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பழைய மாடலில் இருந்த அம்சங்களுடன் கூடுதல் அம்சங்களும் இணைத்து வெளியாகியுள்ள இந்த மொபைலின் விலை ரூ.4,515 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.