திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஆகஸ்ட் 2018 (19:34 IST)

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்று ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இந்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 
 
கையில் பணம் இருந்தும், வங்கி கணக்கில் பணம் இருந்தும் அன்றாட செலவுக்கே மிகவும் சிரமப்பட்டனர். இந்த நடவடிக்கையால் மக்களுக்கு மத்திய அரசு மீது கடும் கோபம் ஏற்பட்டது. 
 
இந்நிலையில் திரும்ப பெறப்பட்ட பணம் குறித்த தகவலை ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதில் இன்னும் ரூ.13,000 கோடி திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வையாக கருதப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, கணக்கில் வராத 3 லட்சம் கோடி ரூபாய் பணம் நாட்டிற்கு திரும்பும் என்று பிரதமர் மோடிய கூறிய பொய்க்காக அவர் மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.