ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (13:26 IST)

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இன்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
வங்க கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவான நிலையில் அது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டது. இந்த புயல் ஆந்திரா - ஒடிசா இடையே கரையைக் கடந்தது. 
 
குலாப் புயல் கரையை கடந்துவிட்டாலும் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனிடையே தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 
 
இன்று காலை உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.