1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (16:22 IST)

தெலங்கானாவில் ரூ.12400 கோடி முதலீடு: அதானி குழுமம் அறிவிப்பு..!

தெலுங்கானா மாநிலத்தில்  12,400 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. 
 
அதானி குழுமம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புதிய முதலீடுகளை செய்து வருகிறது என்பதும் சமீபத்தில் கூட  தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர் மாநிலத்தில் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது என்பதும் தெரிந்ததே.

 
இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவில்  அடுத்த 10 ஆண்டுகளில் 12,400 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப் போவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.  முதல் கட்டமாக அதானி என்டர்பிரைசஸ் மூலம் 5000 கோடிக்கு 100 மெகாவாட் டேட்டா சென்டர் அமைக்கப்பட உள்ளதாகவும் அதன் பின்னர் அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதானி டிபன்ஸ் சிஸ்டம் அண்ட் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களும் அடுத்தடுத்து தெலுங்கானா மாநிலத்தில் முதலீடுச் எய்ய இருப்பதாகவும் அதானி குழுமம் அறிவித்துள்ளது.  
 
அதானி குழுமத்தின் இந்த அறிவிப்பு காரணமாக இன்றைய பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran