செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (19:20 IST)

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை குஷ்பு !

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது, குணச்சித்திர நடிகையாகவும், பாஜக  நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தியவில் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில்  நடிகை குஷ்பு  உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவாவில் வரும்   நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை   நடைபெற வுள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவை  நடத்த ஒரு வழிகாட்டல் குழுவை மத்திய அரசு  அமைத்துள்ளது. அதில், த்கவல் மற்றும் ஒலிபரப்பு  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தலைவராகவும், கோவா மா நில முதல்வர் இணை தலைவராகவும் இருப்பார் எனவும், இவர்களுடன் இணைந்து சினிமா கலைஞர்கள் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சினிமா உறுப்பினர்களின் பட்டியலில்,இயக்குனர் கரன் ஜோகர், நடிகை குஷ்பு, உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.