வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தபோது நடிகையை செல்போனில் படம்பிடித்த மர்ம் நபர்

navneeth
எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தபோது நடிகையை செல்போனில் படம்பிடித்த மர்ம் நபர்
பிரபல நடிகையை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்த போது செல்போனில் படம் பிடித்த மர்மநபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் எம்யும் நடிகையுமான நவ்னீத் ராணா, முதலமைச்சர் உத்தவ்தேவ் தாக்கரே  வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார். 
 
தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்த போது அந்த ஸ்கேன் சென்டரில் இருந்த மர்ம நபர் ஒருவர் நடிகையை படம் பிடித்ததாக தெரிகிறது
 
இது குறித்து நடிகை நவ்நீத் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்