ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (13:39 IST)

தற்கொலை மிரட்டல் ; பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் வெளியேற்றம்

ஆந்திர தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல அதிரடி சம்பவங்கள் நாள் தோறும் அரங்கேறி வருகிறது.


 

 
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே, தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு கமல்ஹாசன் போல், அங்கு அந்நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடத்துகிறார். 
 
அதில் பங்கு பெற்ற நடிகர்களில் பர்னிங் ஸ்டார் என தெலுங்கு சினிமாவில் அழைக்கப்படும் சம்பூர்னேஷ் பாபுவும் ஒருவர். இவர் சமீபத்தில் பல ரகளைகளில் ஈடுபட்டார். பயங்கர கோபத்துடன் ஒருவரை அடிக்கப் பாய்ந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.


 

 
இந்நிலையில், தனக்கு உடல் நலம் சரியில்லை எனவும், பிக்பாஸ் வீடு தனக்கு வசதியாக இல்லை எனவும் கூறி, கத்தியை எடுத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் மிரட்டினார். போட்டியின் விதிமுறைகளை மீறி தற்கொலைக்கு முயன்றதால், அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார்.
 
தெலுங்கு சினிமா ஹீரோக்களின் ஹீரோயிசத்தை பயங்கரமாக கிண்டலடித்து நடித்து இவர் ரசிகர்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.