செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (14:11 IST)

ஜெகன்மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா- ''யாத்ரா 2''பட டிரைலர் ரிலீஸ்!

yatra 2
மம்முட்டி மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள  ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்று படமான ‘’யாத்ரா 2’’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆந்திரம் மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவார்.

காங்கிரஸில் இருந்து விலகிய ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அம்மா நிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார்.

இம்மா நிலத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ரா 2 பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ரா 2-வை மஹி வி ராகவ் எழுதி, இயக்கியுள்ளார். இதில், மம்முட்டி மற்றும் ஜீவா நடித்துள்ளனர். ஜெகம் மோகன் ரெட்டி கேரக்டரில் ஜீவா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  குறிப்பிடத்தக்கது.