வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (15:34 IST)

பிரபல நடிகரை கத்தியால் குத்திய மர்ம நபர்....

கன்னட நடிகர் குரு ஜக்கேஷை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான ஜக்கேஷின் மகன் குரு.  ஜக்கேஷ் குரு என அழைக்கப்படும் இவர், ஏராளமான கன்னடபடங்களில் நடித்துள்ளார்.  தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ரெயின்போ காலணியின் கன்னட ரீமேக்கில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் இவர்.
 
பெங்களூரில் வசித்து வரும் குரு, தன்னுடைய குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக ஆர்.டி.நகருக்கு இன்று காலை காரில் சென்றுள்ளார். திரும்பி வரும்போது, ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். இதைக்கண்டு கோபமடைந்த குரு, அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 
 
வாக்குவாதம் முற்றியதால், அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குருவின் காலின் தொடைப்பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து, அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என அவரின் தந்தை ஜக்கேஷ் கூறியுள்ளார்.