வாகா எல்லையில் அபிநந்தன்: இந்தியாவிடம் சற்றுமுன் ஒப்படைத்த பாகிஸ்தான்
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
இந்த தாக்குதலின் போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிக்கினார். நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார். அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என கூறப்பட்டது.
ஆனால், தர்போது சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அபிநந்தன் இன்னும் இந்திவாவிடம் ஒப்படைக்கப்படவில்லை பாகிஸ்தான் வசமே உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவர் ஒப்படைக்கப்படுவார் எனவும், ஒப்படைப்பு பணிகள் குறித்து நிர்மலா சீதாராமன் கவனம் செலுத்தி வருவதாவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் வாகை எல்லைக்கு அழைத்து வந்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளார்.