வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (18:18 IST)

அபிநந்தன் இந்தியா வந்தாச்சு!! அடுத்து என்ன நடக்கும்?

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இந்தியா வந்தடைந்தார். அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு, 
 
1. முதலில் அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்.
 
2. செஞ்சிலுவை சங்கம் அபிநந்தனிடம் மருத்துவப் பரிசோதனை செய்து, அவருக்கு ஏதும் உடலால் தீங்கிழைக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதனை நடத்தும். 
 
அவருக்கு ஏதேனும் மருந்து தரப்பட்டுள்ளதா? உடல் ரீதியாக, மன ரீதியாக அவர் துன்புறுத்தப்பட்டுள்ளாரா? என்று ஆராய்ந்து செஞ்சிலுவை சங்கம் அறிக்கை தரும். இது ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அவசியமானதாகும்.
 
3. இந்தப் பரிசோதனைக்குப் பிறகு அவர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படுவார்.
 
4. விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். 
 
5. அதன் பிறகு ராணுவ உளவு பிரிவு அபிநந்தனிடம் முழுமையாக விசாரணை நடத்தும். அவருக்கு என்ன நேர்ந்தது? எப்படி நேர்ந்தது? பாகிஸ்தானில் அவருக்கு நடந்தது என்ன? அவர்கள் என்ன பேசினார்கள். இவர் என்ன பேசினார் என்பவை முழுமையாக விசாரிக்கப்படும்.
 
6. பின்னர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது அவருக்கு ஆட்சேபகரமாக ஏதேனும் நடந்திருந்தால் அது பற்றி ஐநாவில் இந்தியா முறையிடும்.