திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (09:05 IST)

இன்று கடைசி நாள்: ஆதார்-பான் இணைக்காவிடில் இருமடங்கு அபராதம்!

pan and aadhar
ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இன்றுக்குள் இணைக்காதவர்கள் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த பல மாதங்களாக ஆதார் எண் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த இரண்டையும் இணைப்பதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி தேதி என்ற நிலையில் அதன் பின்னர் இணைக்கப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் 500 ரூபாய் அபராதத்துடன் ஆதார்  பான் எண்ணை இணைப்பது இன்றே கடைசி நிலை என்றும் நாளை முதல் இரு மடங்கு அபராதம் அதாவது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
 
எனவே இதுவரை ஆதார், பான் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இன்றுக்குள் இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்