புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (16:15 IST)

உணவுக்கு மதம் உண்டா? வாடிக்கையாளரை வறுத்தெடுத்த ஸொமாட்டோ

ஒரு இந்து அல்லாதவர் உணவை டெலிவரி செய்தால் வாங்கி கொள்ள மாட்டேன் என அடம்பிடித்த கஸ்டமருக்கு அதிரடியான பதிலை கொடுத்திருக்கிறது ஸொமாட்டோ நிறுவனம்.

ஸொமாட்டோ இந்தியாவில் பிரபலமான உணவு டெலிவரி செய்யும் நிறுவனம். இதில் பலர் டெலிவரி பாய்களாக பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் ஒரு கஸ்டமர் ஸொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். அதை டெலிவரி செய்ய வந்தவர் இந்து அல்ல என்பதால் அந்த உணவு பொருளை வாங்க முடியாது என்று அடம்பிடித்திருக்கிறார்.

அமித் ஷுகல் என்ற அந்த நபர் ட்விட்டரில் “நான் ஸொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதை கொடுக்க ஒரு இந்து அல்லாதவர் வந்தார். இது குறித்து நான் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது, பணத்தையும் திருப்பி தர முடியாது என்று சொன்னார்கள். அதற்கு நான் இதை வாங்கி கொள்ள சொல்லி நீங்கள் என்னை கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு பணம் வேண்டாம் ஆர்டரை கேன்சல் செய்யுங்கள் என்று கூறினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் ஸொமோட்டோவின் ட்விட்டர் கணக்கை இணைத்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸொமோட்டோ தனது ட்விட்டரில் “உணவுக்கு எந்த மதமும் கிடையாது. உணவே ஒரு மதம்தான்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்ட ஸொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் “ நாங்கள் பெருமைமிக்க இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதில் பெருமைப்படுகிறோம். அந்த பெருமையை கீழ்மைப்படுத்தும் எந்த வியாபாரமும் எங்களுக்கு தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.