திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (22:27 IST)

தாலியை விற்று கழிவறை கட்டிய பெண்!

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே கழிவறை வசதி பெற்றுள்ளனர்.


 
 
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் லதா தேவி. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களை அவர்கள் சந்தித்தனர். இதனால் மனமுடைந்த லதாதேவி எப்படியும் கழிவறை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
 
இதை அடுத்து, அவர் தன் தாலியை விற்று கழிவறை கட்டியுள்ளார். இந்நிலையில் லதா தேவியின் இந்த முயற்சியை பாராட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அவருக்கு 2 லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளது.