திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (12:41 IST)

ஆண் வேடத்தில் நடித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது

ஆந்திராவில் பெண் ஒருவர் ஆணைப் போல் வேஷமிட்டு, மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஈடுகலபாடு கிராமத்தை சேர்ந்த பெண் ரமாதேவி(18). இவர் ஆண்களை போல் வேஷமிட்டு, தற்பொழுது வரை மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே வெளியூரில் வேலை இருக்கிறது என கூறிவிட்டு ஓடிவிடுவார் 
 
சமீபத்தில் மூன்றாவதாக மோனிகா என்ற இளம் பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். மோனிகாவிற்கு ரமாதேவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மோனிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரமாதேவியை போலீஸார் கைது செய்தனர். ரமாதேவி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது பணத்திற்காகவா? அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவா? என்கிற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.