செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (13:04 IST)

பூஜை செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அர்ச்சகர்(பதற வைக்கும் வீடியோ காட்சி)

ஆந்திரா சிவன் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு பூஜை செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலின் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் வெங்கட ராமா ராவ். இவர் வழக்கம் போல் கோவிலை திறந்துவிட்டு, சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அங்கிருந்த இன்னொரு அர்ச்சகர் அவரை எழுப்பி நிற்கவைத்தார்.
 
ஆனால் சிறிது நேரத்திலே அவர் சிவன் சிலை மீது விழுந்தார். இதனால் பதறிப்போன அங்கிருந்த குருக்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
பூஜை செய்துகொண்டிருக்கும் போதே குருக்கள் இறந்த சம்பவம் அப்பகுதினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.