வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (18:53 IST)

லக்னோவில் கர்ப்பிணி பெண்ணை தூக்கிச் சென்ற போலீஸ்காரர்

'காவல் துறை உங்கள் நண்பன்’ என்பதை போலீஸ்காரார் ஒருவர் தனது மனிதாபிமான செயல் மூலம்  மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்  மதுரா ரயில் நிலையத்திற்கு  அருகே உள்ள கண்டோமண்ட் பகுதியில் பாவ்னா என்ற கர்ப்பிணிப் பெண் இடுப்பு வலியால் துடித்துள்ளார்.

இந்நிலையில் அவரது கணவர் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டார். ஆனால் உடனடியாக ஆம்புலன்ஸ் வந்துசேரவில்லை. இதனை அருகே நின்றிருந்த காவல்துறை அதிகாரி சோனு ராஜவுரா பார்த்துவிட்டு அவரும் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை தரப்பிலிருந்து ஆம்புலன்ஸ் எதுவும் அனுப்ப முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து  சற்றும் தாமதிக்காத  சோனு ராஜவிரா, பாவ்னாவை அங்கிருந்து சைக்கிள் ரிக்சாவில் வைத்து மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அந்த மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வசதி இல்லாத நிலையில், அவரே பாவ்னாவை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதன் பிறகு பாவனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

’காவல் துறை உங்கள் நண்பன்’ என்பதை போலீஸ்காரார் ஒருவர் தனது மனிதாபிமான செயல் மூலம் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.அவரது இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.