ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (15:50 IST)

கங்கை நதியை சுத்தம் செய்ய போராடியவர் உயிரிழந்தார்...

நம் நாட்டின் புன்ணிய நதியாக கங்கை உள்ளது பாவங்கள் போக்க இந்த நதியில் மூழ்கி தங்களை பரிசுத்தப் படுத்திக் கொள்ளும் பக்தர்கள் நம் நாட்டில் அதிகம்.
இந்நிலையில் தொடர்ந்து கங்கை நதியில்  பிணங்கள் எரிப்பது, சவங்களை தூக்கி ஆற்றில் எறிவது  போன்ற சம்பவங்கள்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் நாளாக ஆக கங்கை நதி மாசுபட்டுவருவது  கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
இதனையடுத்து கங்கை நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நான்கு மாதமாக உண்னாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவரான சமூக ஆர்வளார் ஜிடி அகர்வால் (87) நேற்று சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்தார்.
 
கடந்த ஜூன் மாதம் 22ஆன் தேதி இநத உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய இவர் வெறும் தண்ணீரை மாத்திரமே தேனுடன் கலந்து குடித்து வந்துள்ளார். தன் கோரிகைகளை அரசு ஏற்காததால் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.