1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2024 (18:52 IST)

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

Mufasa

இன்று வெளியான டிஸ்னியின் ‘முஃபாசா தி லயன் கிங்’ படத்திற்கு மகேஷ்பாபு ரசிகர்கள் பூனைக்குட்டியை தூக்கிச் சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

 

 

குழந்தைகள் படங்களை தயாரித்து வரும் டிஸ்னியின் பிரபலமான படங்களில் ஒன்று ‘தி லயன் கிங்’. இந்த படம் சில ஆண்டுகள் முன்னதாக லைவ் ஆக்‌ஷன் படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் முன்கதையாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ படம் வெளியாகியுள்ளது.

 

சிம்பா சிங்கத்தின் அப்பாவான முஃபாசா எப்படி அந்த காட்டுக்கு ராஜாவானது என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தியில் ஷாரூக்கான், தெலுங்கில் மகேஷ்பாபு, தமிழில் அர்ஜுன் தாஸ் என முக்கிய திரைப்பிரபலங்கள் முஃபாசாவுக்கு டப்பிங் பேசியுள்ளனர்.
 

 

தெலுங்கில் மகேஷ் பாபு டப்பிங் பேசி வெளியாகும் படம் என்பதால் முஃபாசாவை காண காலையிலேயே மகேஷ்பாபு ரசிகர்கள் தியேட்டர்களில் கூடிவிட்டனர். அத்தோடு மட்டுமல்லாமல் செட் ப்ராபர்டியாக சிங்கத்தை தூக்கி வர முடியாது என்பதால் பூனையை தூக்கிச் சென்று அட்டகாசம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K