சைடுகேப்பில் அத்துமீறிய மனைவி: 40 முறை கொடூரமாககுத்தி கொலை செய்த கணவன்
அரியானா மாநிலம் குருகிராமில் அடுத்தவர்கள் முன்னிலையில் தம்மை அசிங்கப்படுத்திய மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குருகிராம் பகுத்யை சேர்ந்தவர் பங்கஜ். இவரது மனைவி வன்ஷிகா சர்மா. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே கணவன் மனைவிக்கிடையே எந்நேரமும் பிரச்சனை தான். வன்ஷிகா தனது கணவரை அவ்வப்போது அடுத்தவர் முன்னிலையில் அசிங்கப்படுத்தி வந்துள்ளார்.
அப்படி நேற்றும் வன்ஷிகா கணவரை திட்டியுள்ளார். இதனால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த பஞ்கஜ், வன்ஷிகா தூங்கியதும் அவரை 40 முறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வன்ஷிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பங்கஜை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.