5 வயது மகனை கயிற்றில் தொங்கவிட்டு கொடூரமாக தாக்கிய தந்தை; நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி
ராஜஸ்தானில் பெற்ற மகனை,அவரது தந்தையே கயிற்றில் தொங்கவிட்டு அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமாத்தைச் சேர்ந்தவர் ஜெயின் சிங். இவருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று குழந்தைகள் இருவரும் தங்களது வீட்டினருகே இருந்த மணல் குவியலில் விளையாடி உள்ளனர். அதனால் அவர்களது துணிகள் அழுக்காகி இருக்கிறது. வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய ஜெயின் சிங், குழந்தைகளின் துணி அழுக்கானதைக் கண்டு கோபமடைந்து, அவர்கள் இருவரையும் கொடூரமாக தாக்கினார். கொடூரத்தின் உச்சமாய் பெற்ற பெற்ற மகனை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு கொடூரமாக தாக்கியுள்ளார் அந்த கொடூர தந்தை.
இந்த கொடூர காட்சியை ஜெயின் சிங்கின் சகோதரர் வீடியோ எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வெளியானதையடுத்து ஜெயின் சிங் மற்றும் அவரது சகோதரை போலீசார் கைது செய்தனர். பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கொடூர தாக்குதல் நடத்திய ஜெயின் சிங்கிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.