வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (09:00 IST)

சினிமா பாணியில் காதலியிடம் மன்னிப்பு கேட்ட காதலன் - கடைசியில் நேர்ந்த சோகம்

வாலிபர் ஒருவர் சினிமா பாணியில் தனது காதலியிடம் மன்னிப்பு கேட்க நினைத்து அவர் போலீஸில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஸ்டிராவை சேர்ந்த நிலேஷ் கெடேகர்(25), என்பவர் தொழிலதிபராக உள்ளார். இவர் ஷிவ்தே என்ற ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அந்த பெண்ணிற்கும் நிலேஷிற்கும் சண்டை ஏற்பட்டதால், அந்த பெண் நிலேஷுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் நிலேஷின் நண்பர் ஒருவர் கொடுத்த ஐடியாவின் படி, தனது காதலி வரும் சாலையின் நடுவே, ஷிவ்தே என்னை மன்னித்து விடு என 300 பேனர்களை வைத்துள்ளார் நிலேஷ்.
இந்த புகைப்படத்தை பார்த்த போலீஸார், பேனரை வைத்த நிலேஷை பிடித்து விசாரித்ததில், தனது காதலியை சமாதானம் செய்ய இவ்வாறு செய்ததாக கூறினார். 
 
இதையடுத்து போலீஸார், அவர் மீது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர்.
 
காதலியை சமாதானப்படுத்த நிலேஷ் எடுத்த வித்தியாசமான முயற்சி அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.