திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (13:05 IST)

பலத்த சத்தத்துடன் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்தது

பலத்த சத்தத்துடன் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்தது

கர்நாடக மாநிலம், மைசூரு நீதிமன்றத்தின் கழிவறையில் பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இந்த, சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.


 


இதில் கழிவறையின் கதவு மற்றும் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இந்த வெடி விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திலும், கோர்ட் வளாகத்திலும் சோதனை நடத்தினர். எந்த வகையான குண்டு வெடித்தது என்றும், யார் அந்த வெடிகுண்டை கழிவறையில் வைத்தது என்றும் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.