1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (12:22 IST)

கணவனை கட்டிப்போட்டு 8 மாத கர்ப்பிணியை கற்பழித்த கொடூரர்கள்

மகாராஷ்டிராவில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை 4 அயோக்கியன்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் அரசு என்றே சொல்லலாம். ஏனென்றால் இது மாதிரியான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவன்களை கொடூரமாக மக்கள் மத்தியில் கொலை செய்தால் வரும் காலங்களில் தவறு நடைபெறாமல் இருக்கும். மாறாக அரசு அந்த அயோக்கியன்களை சிறையில் அடைப்பதால் அங்கு அவன்கள் ஜாலியாக இருக்கின்றனர். 
 
மகாராஷ்டிராவில் கணவனும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவியும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த கொடூரன் ஒருவன், அந்த கர்ப்பிணிப்பெண்ணின் கணவரை தாக்கி விட்டு, கர்ப்பிணிப்பெண் என்றும் பாராமல் அந்த பெண்ணை தனது கூட்டாளிகளோடு சேர்ந்து கற்பழித்துள்ளான்.
 
அந்த தம்பதியினர் போலீஸாரிடம் புகார் அளித்ததன் பேரில் அந்த 4 அயோக்கியன்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.  
 
அரசு கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்து கொஞ்சிக்கொண்டிருப்பதற்கு பதிலாக அவன்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வரை இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்.