1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஜூலை 2018 (18:22 IST)

கர்ப்பிணி பெண்களுக்கு வயகரா மாத்திரை: ஆபத்தில் முடிந்த டெஸ்டிங்!

ஆய்வு ஒன்றுக்காக கர்ப்பிணி பெண்களுக்கு வயகரா மத்திரை கொடுக்கப்பட்டது ஆபத்தான விளைவுகளை கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சோதனை முயற்சியாக கர்ப்பிணி பெண்களுக்கு வயகரா மாத்திரை கொடுத்ததில் 11 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். டச்சு ஆய்வு ஒன்றில் பங்கெடுத்த பெண்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. 
 
அதாவது கருவில் நச்சுக்கொடி பாதிக்கபட்டு இருக்கும் குழந்தைகளின் நலனுக்காகவே இந்த மருந்து வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மருந்தானது ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தி நச்சுக்கொடியை சரிப்படுத்தம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், இந்த மருந்தானது கருவில் இருக்கும் குழந்தைகளின் நுரையீரலை பாதித்து மரணத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான உண்மையாக காரணம் என்னவென தெரியவில்லை.