திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (11:16 IST)

100 வயது பாட்டி கற்பழித்துக் கொலை

உத்திரபிரதேசத்தில் 100 வயது பாட்டி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறு பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த பாலியல் இச்சைக்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். கொடூரத்தின் உச்சமாய் பாட்டியை ஒரு அயோக்கியன் கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
உத்திரபிரதேச மாநிலம் ஜானி என்ற கிராமத்தில் 100 வயது பாட்டி ஒருவர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் குடிபோதையில் அந்த பாட்டியின் வீட்டினுள் நுழைந்த ஒரு இளைஞன் அந்த பாட்டியை பலாத்காரம் செய்துள்ளான். இதில் அந்த பாட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த்னர். மேலும் அந்த அயோக்கியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.