திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 மே 2023 (10:56 IST)

கர்நாடக அமைச்சரவையின் முதற்கட்ட பட்டியல்: யார் யார் அமைச்சர்கள்..?

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இன்று சித்தராமையா பதவி ஏற்க இருக்கும் நிலையில் கர்நாடகா அமைச்சரவையின் முதல் பட்டியல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து இன்று அக்கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது. 
 
சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்க இருக்கும் நிலையில் ஒரு சில அமைச்சர்களும் இன்றைய பதவி ஏற்பார்கள் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதல் அமைச்சரவை பட்டியல் சற்று முன் வெளியாகிய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களான பரமேஸ்வரா, கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், சதீஸ் ஜர்கிஹோலி, பிரியங் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமது ஆகிய 8 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran