புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (15:55 IST)

சித்தராமையா பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி வர மறுப்பா? பரபரப்பு தகவல்..!

கர்நாடக மாநில முதலமைச்சராக நாளை பொறுப்பேற்க இருக்கும் சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் சித்தராமையா பதவியேற்பு விழாவிற்கு வருமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் அதற்கு பதிலாக அவரது கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தனிப்பட்ட முறையில் சித்தராமையா மம்தாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி தனது பிரதிநிதியை பதவி ஏற்பு விழாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் மம்தா பானர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் கர்நாடக மாநில மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran