திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 11 மே 2016 (15:25 IST)

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

ஹரியாணா மாநிலத்தில் தல்ஜிந்தர் கௌர் என்ற 72 வயது மூதாட்டி ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி பெற்றெடுத்துள்ளார். திருமணமாகி 46 ஆண்டுகள் கழித்தும், மாதவிடாய் நின்று 20 வருடங்கள் கழித்தும் அவருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 
 
செயற்கை கருத்தரித்தல் மூலம் அவர் இந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹிஸார் தேசிய கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் அனுராக் பிஷ்ணோய் கூறுகையில், மொஹிந்தர் சிங் கில், தல்ஜிந்தர் கௌர் தம்பதியினர் 46 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தனர்.
 
மூன்று ஆண்டுகளாக செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தையை பெற செய்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு முறை இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர் என அவர் கூறினார்.
 
எங்களுக்கு திருமணமாகி 46 வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை இல்லாததால் மிகவும் கவலையுடன் இருந்தோம். தற்போது செயற்கை கருத்தரித்தல் மூலம் எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடவுள் எங்களது பிரார்தனையை ஏற்றுக் கொண்டுள்ளார். எனது குழந்தையை பார்க்கும் போது எனக்கு மிகுந்த உற்சாகம் மற்றும் சக்தி பிறக்கின்றது என தல்ஜிந்தர் கௌரின் கணவர் மொஹிந்தர் சிங் கூறினார்.