வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (08:38 IST)

உத்தர பிரதேச போராட்டம்; 6 பேர் பலி; இணையத்தளங்கள் முடக்கம்

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் கண்டாநகர், கோரக்பூர், ஷமாரூஃப், இஸ்மெயில் பூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரக்பூரில் நடந்த போராட்டத்தை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது, மோதல் ஏற்பட்டது. போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் நொறுக்கப்பட்டன. பின்பு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 6 பேர் உயிரிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதிகளில் இணையத்தள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.