புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:48 IST)

கொரோனாவுக்கே முடியாத நிலையில் இப்போது நோரோ...

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் புதிய வகை நோரோ வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது.

 
கேரளாவில் திருச்சூரில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுபோக்கும், தலைவலியும் இருந்து வந்தது. இதனால் மாணவிகளின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்த போது 54 மாணவிகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 
 
இதையடுத்து பாதிப்புக்குக்குள்ளான மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோரோ வைரஸ் மோசமான குடிநீர் மூலமே பரவுவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 
 
எனவே குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வீடு, வீடாக சென்றும் ஊழியர்கள் ஆய்வு செய்து வருவதோடு சுத்தமான குடிநீர் குறித்து விழிப்புணர்வையும் மக்களுக்கு எடுத்து சொல்ல் வருகின்றனர்.