வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2018 (17:37 IST)

54 வருடத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட தேர்வாகாத மாநிலம்

கடந்த 54 வருடங்களில் 12 சட்டமன்ற தேர்தல்களில் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ கூட தேர்வாகாத மாநிலமாக உள்ளது நாகலாந்து

நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 195 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 5 பெண்  வேட்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியிடும் ஐந்து பெண் வேட்பாளர்களில் முன்னாள் நாகலாந்து அமைச்சரின் மனைவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நாகலாந்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால் முடிவு மக்கள் கையில் இருப்பதால் தேர்தல் முடிவான மார்ச் 3ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்