மியான்மரில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட இந்திய ராணுவம்
நாகலாந்தை தனி நாடாக கோரும் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியது.
எல்லைத் தாண்டி இந்திய ராணுவம் மியான்மர் நாட்டிற்குள் புகுத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகலந்தை தனி நாடாக கோரும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 70 கமாண்டோ வீரர்கள் கொண்ட ராணுவ படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் முழுமையாக கிடைக்ககவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்று இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என கருதப்படுகிறது.
மேலும், தேசிய சோஷியலிச நாகாலந்து கவுன்சிலைச் சேர்ந்த இயக்கத்தினரின் முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர்.