தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல்! – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
இந்தியாவில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் தமிழகம் உட்பட அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 5 மாநிலங்களுக்குமான தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகள், அசாமில் 126 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 235 தொகுதிகளில் 75 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.