1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (13:30 IST)

இந்தியாவில் 46 மருந்துகள் தரமற்றவை- மத்திய அரசு

medicine
.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் விற்கப்படும் சளி, உயர் ரத்த அழுத்தம்,ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச் சத்துக் குறைப்பாடு உள்ளிட்ட பிரச்சனைக்களுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
 
இதன் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட  நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது.