செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (11:27 IST)

ஆரம்பமே அதிர்ச்சி.. 3வது ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா அவுட்..!

rohith sharma
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது என்பதும் அந்த அணியின் ஜோ ரூட் அபாரமாக சதம் அடித்ததை அடுத்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்துள்ளது.

இதனை அடுத்து ஜடேஜா நான்கு  விக்கெட்டுகளையும்   ஆகாஷ் தீப் மூன்று விக்கெட்டுகளையும் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்த நிலையில் மூன்றாவது ஓவரிலேயே கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ரன்களில் அவுட் ஆகிவிட்டார்

தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடி வருகின்றனர். சற்றுமுன் வரை இந்திய அணி ஒன்பது ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது

கடந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் நல்ல ஸ்கோர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran