இந்திய தபால்துறையில் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கான 44,228 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஏராளமான பணியாளர்களை கொண்ட துறையாக ரயில்வேக்கு நிகராக தபால்துறையும் உள்ளது. தபால்துறையில் ஆண்டுதோறும் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
அந்த வகையில் தற்போது தபால் அலுவலகங்களில் தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/Dak Sevak) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் மூலம் இந்தியா முழுவதும் 44,228 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 3,789 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். இதில் தபால் அலுவலர் பணிக்கு சம்பளம் ரூ.12,000 - ரூ.29,380, உதவி தபால் அலுவலர் பணிக்கு ரூ.10,000 - ரூ.24,470 ஆகவும் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு தேர்வுகள் கிடையாது. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2024 ஆகும். பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் மேலதிக தகவல்களுக்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற வலைதளத்தை காணலாம்.
Edit by Prasanth.K