வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 22 ஜூன் 2019 (14:01 IST)

அண்ணன் ன்னு நம்பிதான் என் பொண்ண அனுப்புனேன், ஆனா அவன்……..

பஞ்சாப் மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, எட்டாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பஞ்சாபின் சங்கத் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் 4 வயது சிறுமியை ”அண்ணன் கூட விளையாட வா” என அழைத்துச் சென்றுள்ளான்.

அதன் பிறகு வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாமல் இருந்ததால் சிறுமியின் தாயார், அந்த சிறுவனின் வீட்டில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டினுள் அந்த சிறுமியை, 13 வயது சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. பின்பு இந்த சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரிய வர, அந்த 13 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே சிறுமியின் பெற்றோர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த 13 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளது.

எட்டாம் வகுப்பு சிறுவனின் இந்த செயல், அந்த பகுதியிலுள்ள மற்ற சிறுமிகளின் பெற்றோர்களுக்கு பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.