ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (16:00 IST)

3000 பேர் உள்ள கிராமத்தில் 1000 பேர் யூடியூபர்.. இந்தியாவில் இப்படி ஒரு ஆச்சரிய கிராமமா?

இந்தியாவில் 3000 பேர் மட்டுமே உள்ள கிராமத்தில் 1000 பேர் யூடியூபர்கள் ஆக உள்ள ஆச்சரியமான தகவல் பெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியுப் மூலம் தற்போது பலர் வருமானம் பார்த்து வருகின்றனர் என்பது ஒரு சிலர் பகுதிநேர பணியாகவும் சிலர் முழு நேர பணியாகவும் யுடியூபில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துளசி என்ற கிராமத்தில் குலாப் யாதுவ் என்பவர் யூடியூபராக இருந்து மிகப்பெரிய அளவில் சம்பாதித்து வருகிறார். இவர் தன்னை போலவே தனது கிராமத்தில் உள்ளவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து தனது கிராமத்தில் உள்ள ஆயிரம் பெயர்களை யூடியூபர்களாக மாற்றி உள்ளார்

தற்போது அந்த ஆயிரம் பேர்கள் யூடியூப் மூலம் நல்ல வருமானம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குலாப் யாதவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva