செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:15 IST)

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு… கையைப் பிசையும் சுகாதாரத்துறை!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 3000 பேர் சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் தலைமறைவாகியுள்ளனராம்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3000 பேர் சிகிச்சைக்கு வராததால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.இது சம்மந்தமாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் பேசியதில் ‘பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இது சம்மந்தமாக கொரோனா பாசிட்டிவ்வான 3000 பேர் சிகிச்சைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடிப்பது சவாலானது. அதனால் தயவு செய்து தொற்றுள்ளவர்கள் மருத்துவமனக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.