புதன், 26 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:11 IST)

ஷிவம் மவியின் முதல் ஓவரை நாசம் செய்த பிருத்வி ஷா!

நேற்றைய டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில் பிருத்விஷா அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்தார்.

கொல்கத்தா அணி நிர்ணயித்த 155 ரன்கள் இலக்கை அனாயசமாக வெற்றிக்கண்டது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தது மிக முக்கியக் காரணமாக அமைந்தது. அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை கொல்கத்தாவின் ஷிவம் மவி வீச அந்த ஓவரின் அனைத்து பந்துகளிலும் பவுண்டரிகளை பறக்க விட்டார் பிருத்வி ஷா. அந்த ஓவரில் மவி வீசிய ஒரு வொய்ட் பந்தையும் சேர்த்து மொத்தம் 25 ரன்கள் சேர்க்கப்பட்டது.