1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (18:18 IST)

உடைகிறதா காங்கிரஸ்: 24 அதிருப்தி தலைவர்கள் அவசர ஆலோசனை!

5 மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் தனியாக அவசர ஆலோசனை செய்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாபியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மற்ற நான்கு மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது
 
குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கங்களில் தான் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியில் உள்ள 24 முக்கிய தலைவர்கள் தேர்தல் தோல்வி குறித்து அவசர ஆலோசனை செய்ய இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.