வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜனவரி 2025 (18:12 IST)

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

2025 - 2026 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதில் தளர்வுகளை எதிர்பார்த்து பல தொழிற்துறையினரும் காத்திருக்கின்றனர்.

 

 

2025 - 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேசமயம் டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 

இதனால் பட்ஜெட்டில் டெல்லிக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பதால், டெல்லிக்கு இந்த ஆண்டு எந்த பட்ஜெட்டும் அறிவிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

 

அதேசமயம் தொழிற்துறையினர் பலரும் பட்ஜெட்டில் இந்த முறை தளர்வுகள் வழங்கப்படுமா என காத்திருக்கின்றனர். முக்கியமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வரி விகிதம் 25ல் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருது வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து செல்போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்ற அறிவிப்பு உள்நாட்டு தயாரிப்புகளை பாதிக்க கூடும் என்ற குரல்களும் இருந்து வருகிறது.

 

விவசாயம் பொறுத்தவரை விவசாயிகளுக்கான கிசான் உதவித்தொகைக்கான நிதி உள்ளிட்டவை வழக்கமான பட்ஜெட் அறிவிப்புகளாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையில் புதிய வந்தே பாரத் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம். 

 

Edit by Prasanth.K