1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (15:16 IST)

ஒருநாள் முழுவதும் பனைமரத்தின் உச்சியில் உட்கார்ந்து இருந்த இளைஞர்: மீட்பு படையினர் ஆச்சரியம்

ஒருநாள் முழுவதும் பனைமரத்தின் உச்சியில் உட்கார்ந்து இருந்த இளைஞர்

ஒருநாள் முழுவதும் பனைமரத்தின் உச்சியில் உட்கார்ந்து இருந்த இளைஞர்
ஒரிசாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒருநாள் முழுவதும் பனைமரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு இருந்ததை அடுத்து அவரை மீட்பு படையினர் மிகவும் கஷ்டப்பட்டு மீட்டனர் 
 
ஒரிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 18 வயது வாலிபர் ஒருவர் வெள்ளத்திற்கு பயந்து பனை மரம் ஒன்றில் ஏறி உச்சியில் உட்கார்ந்து கொண்டார். ஏறின வேகத்தில் அவரால் மீண்டும் இறங்க முடியவில்லை. அதனால் அவர் பனைமர உச்சியில் தவித்துக் கொண்டிருந்தார்
 
ஒரு நாள் முழுவதும் அந்த பனை வாரத்திலேயே அவர் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து மீட்புப் படையினருக்கு தகவல் கிடைக்க அவர்கள் விரைந்து வந்து கிரேன் மூலம் அந்த வாலிபரை கீழே மிகவும் கஷ்டப்பட்டு கீழே இறக்கினார்கள்
 
வெள்ளம் அதிகமாகி இடுப்புக்கு மேல் தண்ணீர் அதிகமாகிவிட்டது என்றும், அதனால் பயந்து பனை மரத்தில் ஒரு ஆவேசத்தில் ஏறிவிட்டதாகவும், ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் அதில் இருந்து இறங்குவதற்கு பயமாக இருந்ததால் பனைமரத்தின் உச்சியில் இருந்ததாகவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்