1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 ஜனவரி 2025 (13:09 IST)

62 பேர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீராங்கனை.. நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த 18 வயது பள்ளி மாணவி ஒருவர் ஐந்து ஆண்டுகளாக 64 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளியில் தற்செயலாக நடந்த ஒரு கூட்டத்தில் இந்த தகவலை அவர் தெரிவித்ததாகவும், 13 வயதில் இருந்து, வயது வித்தியாசம் இன்றி தனது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட பலர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து, அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், சில மாணவர்கள் என பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, முதல் கட்டமாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்ததாகவும், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் குறித்த விவரங்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, இதுவரை 44 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து இருக்கின்றனர். விரைவில் மற்றவர்களும் பதிவு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Edited by Siva