1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (12:18 IST)

’வருத்தம்’ - ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


 
மேலும், இந்த தாக்குதலில் 20 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே, தீவிரவாதிகள் தாக்குதலுக்கு, ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

இதனால், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கொள்ள இருந்த ரஷ்யா மற்றும் அமெரிக்கா பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதை அடுத்து, இந்த தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங், காஷ்மீர் முதலமைச்சர், ஆளுநர், அதிகாரிகள், ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.