செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:55 IST)

கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் மீட்பு.. பாரத் மாதா கீ ஜே’ என கோஷம்..!

indian ship
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சரக்கு கடத்தப்பட்ட நிலையில் அதில் 15 இந்தியர்கள் இருந்தனர். இந்த தகவல் தெரிந்ததும் கடலோர காவல் படையின் விமானம் சம்பவ இடத்திற்கு சென்று கப்பலில் சிக்கி உள்ள 15 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி சரக்கு கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட இந்தியர்கள் உற்சாகத்தில் பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டதாகவும் தகவல் தெரிய வந்தது.  


இந்தியர்களை மீட்க கடலோர காவல் படையினர் கப்பலுக்கு சென்றபோது கப்பலில் கடத்தல் காரர்கள் யாரும் இல்லை என்றும் அவர்கள் தப்பி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் கூறியபோது 24 மணி நேரமாக நாங்கள் கடத்தல்காரர்களிடம் சிக்கி தவித்தோம் என்றும் இந்திய கடற்படையினர் வந்ததும் தான் எங்களுக்கு நிம்மதி வந்தது என்றும் தெரிவித்தனர்.

 
Edited by Siva